புதினங்களின் சங்கமம்

புலம்பெயர் நாட்டிலிருந்து வந்த உத்தரவு! 8 லட்சம் ரூபா ஒப்பந்தத்தில் நடந்த கொலை!

வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் ‘குங்பூ ருவான்’ என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களைப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் தவிர்த்து வந்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளைஞரைத் தீர்த்துக் கட்டுவதற்காக 8 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்ததாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறுகையில், நவகமுவ, கொரதொட்ட, சமனல உயன வீதியில் வைத்து இந்த இளைஞர் கடந்த 16-ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கொலையைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் மற்றும் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர், வெளிநாட்டில் தங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ‘குங்பூ ருவான்’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பில் பண வசூல் செய்பவராகக் கடமையாற்றி வருவதுடன், அவர் குறித்த கடத்தல்காரரின் நெருங்கிய உறவினர் என்பதும் அம்பலமாகியுள்ளது.

அதேவேளை கொலையைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x