Home புதினங்களின் சங்கமம் யாழில் பண்டல் பண்டலாக பெருந்தொகையான கஞ்சா மீட்பு!!

யாழில் பண்டல் பண்டலாக பெருந்தொகையான கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 2:30 மணியளவில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினரால் ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்று வத்திராயன் பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.இச் சுற்றிவளைப்பில் 54 பொதிகள் அடங்கிய 103 kg கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.