புதினங்களின் சங்கமம்

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி! சுட்டவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்ட காட்சிகள் இதோ!

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.குறித்த துப்பாக்கிட்டு சம்பவத்தில் சசிக்குமார் என்பரே இன்று சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இவர் தலவாக்கலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் சற்று முன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுட்டுக்கொன்ற 2 பேர் கிரேன்ட்பாஸ் பகுதியில் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.