புதினங்களின் சங்கமம்

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடத்தை பெறும் இலங்கை நட்சத்திரம்!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க அவுஸ்திரேலியாவின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் மலிங்க ஓய்வை அறிவிக்கவுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

இதனால் ஓய்விற்குப் பின்னர் அவர் தனது குடும்பத்துடன் அவுஸ்ரேலியாவில் குடியேறவுள்ளார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாக பங்களாதேசின் கிரிக்கெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் அவர் ஏதாவது பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஏற்கக்கூடும் எனவும் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

லசித் மலிங்க தற்போது அவுஸ்திரேலியா பயணம் செய்துள்ள நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.