Latestபுதினங்களின் சங்கமம்

அமசடக்காக இருந்து விளையாட்டுக் காட்டும் சத்தியமூர்த்தியும் சட்டவைத்தியர் செல்லையா பிரணவனும்!! நடப்பது என்ன?

பேஸ்புக்கில் தம்மைப் பற்றி பதிவு போட்டதற்காக கிளிநொச்சியைச் சேர்ந்த கிருஸ்னா என்ற மனித உரிமை செயற்பாட்டாளரை அதுவும் நோயாளியாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவரை கடுமையாக அச்சுறுத்தி மிரட்டல் விட்டது மட்டுமல்லாது பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் பெயரையும் இழுத்து அவருடன் கதைத்து உனக்கு நடவடிக்கை எடுப்பேன் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியும் யாழ் போதனாவைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவும் அச்சுறுத்தியுள்ளார்கள். வைத்தியசாலைக்கு வந்த ஒரு நோயாளரை இவ்வாறு அச்சுறுத்தியுள்ளது மிகக் கடுமையான மனித உரிமை மீறல் எனவும் இது தொடர்பாக வடக்கு கிழக்கில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. இதே வேளை குறித்த அச்சுறுத்தல் தொடர்பாக பிரதான ஊடகங்கள் கூட செய்தி வெளியிடாது சத்தியமூர்த்திக்கும் பிரணவனுக்கும் பயந்து அச்சத்தில் இருக்கின்றார்களா? என சமூகவலைத்தளங்களில் ஊடகங்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

சத்தியமூர்த்தி மற்றும் செல்லையா பிரணவன் போன்றவர்கள் யாழ் போதனாவைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை தமது சுயநலனுக்காக அச்சுறுத்தினால் உடனடியாக பொலிஸ் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிடுங்கள். அத்துடன் சுகாதார அமைச்சருக்கும் முறைப்பாட்டைப் பதிவு செய்யுங்கள். ஏனெனில் குறித்த இருவரும் அமசடக்காக இருந்து கொடூர செயற்பாடுகளைச் செய்கின்றார்கள் என்பது கிருஸ்னா விடயத்திலிருந்து அம்பலத்துக்கு வந்துள்ளது.

தற்போது சத்தியமூர்த்தி மற்றும் சட்டவைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா போன்றவர்களை கண்டால் காறித் துப்பும் நிலையிலேயே பெரும்பாலானவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் இருவர் தொடர்பாக சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை முன்னாள் வைத்திய அதிகாரி அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்கள் உண்மையா? பொய்யா? என்பதை மக்கள் ஊகித்து அறிவதற்கு முன் இவர்கள் தற்போது அமசடக்காக இருந்து செய்யும் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் இவர்கள் இருவர் தொடர்பாகவும் பெரும் அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவர்களைக் கண்டால் மக்கள் மத்தியில் ஒரு போதும் மதிப்பு இருக்கப் போவதில்லை. இவர்களை நேரில் பார்க்கும் ஒவ்வொரு நோயாளியும், பொதுமகனும் வில்லனாகவே பார்க்கப் போகின்றார்கள். அந்த அளவுக்கு இவர்கள் இருவரும் ஒரு நோயாளியை உடல், உள ரீதியாக வல்லுறவு செய்துள்ளார்கள். வன்மம் தீர்த்துள்ளார்கள்.

யாழ் கோம்பையன்மணல் சுடலைக்குள் நிற்கும் ஊழியர்களுக்கு அங்கு இறுதிக்கிரிகைகளைச் செய்யச் செல்பவர்கள் எவ்வாறான மரியாதை கொடுத்து அவர்களுடன் அந்த நேரத்தில் கதைத்துப் பழகி செல்கின்றார்களோ அதே நிலை இவர்கள் இருவருக்கும் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலம் இவர்கள் யாழ் போதனாவைத்தியசாலையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் இவர்களை சுடலைக்குள் நிற்கும் ஊழியர்கள் என்றே மக்கள் கருதிப் பழகிச் செல்வார்கள்.