யாழில். முகங்களை மறைத்தவாறு துவிச்சக்கர வண்டியில் திரியும் கொள்ளை கும்பல்!! Photos
யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் முகங்களை மறைத்து கறுப்பு துணிகளால் கட்டியவாறு துவிச்சக்கர வண்டிகளில் வந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை பற்றிய தகவல்களை தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், கொக்குவில், மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற பல திருட்டு சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பங்களுடன் குறித்த கும்பல்களுக்கு தொடர்பு இருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த கும்பல் துவிச்சக்கர வண்டிகளில் வீதிகளில் முகங்களை மறைத்தவாறு திரியும், சிசிரிவி காட்சிகளை பொலிஸார் வெளியிட்டு , அதில் உள்ள நபர்கள் பற்றிய தகவல்களை அறிந்தால் , அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
தகவல்கள் தரும் நபர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் , அவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.