புதினங்களின் சங்கமம்

நள்ளிரவில் பயங்கரம்!! யாழிலிருந்து கொழும்பு சென்ற PPN சொகுசு பஸ் மாங்குளத்தில் விபத்து!! 3 பேர் பலி!! Video

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில்   இடம் பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு, இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து நேற்று இரவு  11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக, ஏ9 வீதியில் 228வது கிலோமீற்றர்  பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன்போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி, பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது, அதே திசையில் வருகை தந்த பாரவூர்தி  ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியுள்ளது.

இதன்போதே  வீதியில் நின்ற மூவர் பார ஊர்தியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உடல்சிதறி  உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தி  சாரதி மற்றும் பேருந்தில்  பயணித்த ஒருவர் என இருவர் படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 

May be an image of 4 peopleMay be an image of textMay be an image of van and textMay be an image of road

May be an image of grass and roadMay be an image of 4 people, ambulance and text