சினிமா

கணவனும் நடிகர் தனுஷும் அறைக்குள் ஓரினச்சேர்க்கை!! நேரில் பார்த்தேன்!! பாடகி சுசித்ரா பரபரப்பு புகார்!! வீடியோ

பாடகி சுசித்ரா தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறியிருக்கிறார். அதில் சமீபத்தில் வெளியான வீடியோவில் என்னுடைய கணவரும் நடிகர் தனுஷும் ஒரு அறையில் என்னவெல்லாம் பண்ணுனாங்கன்னு எனக்கு தெரியும் என்னுடைய கணவர் ஓரின சேர்க்கையாளர் என்ற குற்ற சாட்டை சுசித்ரா வைத்திருந்த நிலையில் அதற்கு அவருடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பதில் கொடுத்து இருக்கிறார்.

ரேடியோ ஜாக்கியாக பிரபலமான பாடகி சுசித்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பாடல்கள் பாடி இருக்கிறார். அதோடு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான தமன்னா, மாளவிகா, ஸ்ரேயா, லட்சுமி ராய் போன்ற பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். தமிழில் வெளியான “லேசா லேசா” என்ற பாடல் மூலம் தான் பாடகியாக சுசித்திரா அறிமுகம் ஆகி இருந்தார். அதைத்தொடர்ந்து பல பாடல்கள் பாடி இருக்கிறார். பிக் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல் போன்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்த நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண 2005 ஆம் ஆண்டு நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது. 2016 ஆம் ஆண்டு இவர்களுடைய டுவிட்டர் பக்கத்தில் சுசி லீக்ஸ் என்ற பெயரில் பல நடிகர் நடிகைகள் பற்றி பல்வேறு விஷயங்கள் பகிரப்பட்டது.

அது குறித்து பல வருடங்கள் கழித்து இப்போது சுசித்ரா பேசியிருக்கிறார். அதில் என்னுடைய கணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து தான் என்னுடைய பாஸ்வேர்டை திருடி பல நடிகர் நடிகைகள் பற்றி பல விஷயங்களை போட்டு என்னை சிக்க வைத்து விட்டனர் என்று கூறியிருந்தார். அதோடு தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் மீது மேலும் சில குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்தார்.

அதில் என்னுடைய கணவர் ஓரின சேர்க்கையாளர் தான். அதை அவருக்கு வெளியே சொல்ல தைரியம் கிடையாது. திருமணமான இரண்டு வருடத்தில் நான் அதை கண்டுபிடித்து விட்டேன். என்னுடைய கணவருக்கும் தனுஷுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது. ஒரு நாள் குடித்துவிட்டு இருவரும் ஒரே அறைக்குள் போய்விட்டனர். அங்கு என்னவெல்லாம் பண்ணுனார்கள் என்பது எனக்கு தான் தெரியும். எனக்கும் கார்த்திக்கும் பெற்றோர்கள் பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள். இதனால் நான் அவரிடம் காதலை எதிர்பார்க்கவில்லை. நான்தான் முதலில் விவாகரத்து கேட்டேன். ஆனால் அவர்தான் சுச்சி லீக்ஸுக்கு காரணம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். விவாகரத்து இருக்கட்டும்.. சைந்தவிக்காக ஜீ தமிழ் செய்த சிறப்பு வரவேற்பு.. அடடா க்யூட்டான டான்ஸ் அதில் நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதை வெளியே சொல்வதற்கு நான் அசிங்கப்படக்கூடிய ஆள் கிடையாது. செக்ஸ் விஷயம் தனிப்பட்டவர்களுடைய விருப்பம். அதில் நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் தைரியமாக நான் இப்படித்தான் என்று வெளியே சொல்லி இருப்பேன். எந்த இடத்திலும் அதை மறைத்து வைத்து இன்னொருவரை கஷ்டப் படுத்த வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. அதே நேரத்தில் சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கலந்துகொள்ளும் பிரைட் மார்க் நிகழ்ச்சியில் நான் எந்த நாட்டில் இருந்தாலும் தவறாமல் வந்து கலந்து கொள்வேன். அதற்கு ஓரினச்சேர்க்கையாளராக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. ஓரின சேர்க்கையாளர்களுக்கு நான் சப்போர்ட் கொடுக்கிறேன் என்பதால் நான் ஓரினச்சேர்க்கையாளர் என்று இல்லை. அப்படி இருந்தால் நான் ஆமாம் என்று சந்தோசமாக தான் சொல்லுவேன். அதை வெளியே சொல்ல அசிங்கப்பட மாட்டேன் என்று அதில் கார்த்திக் பேசி இருக்கிறார்.