புதினங்களின் சங்கமம்

பின்பகுதியில் ஏற்பட்ட விபத்து!! பிரியதர்சினி பரிதாபகரமாகப் பலி!!

புலத்சிங்கள, பரகொட, வீதியில் கொட்டபன்வில மயானத்திற்கு அருகில், இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த 34 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்..புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த ரசிகா பிரியதர்ஷனி என்ற திருமணமான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.புலத்சிங்களவில் இருந்து பரகொட செல்லும் வீதியில், கொட்டபன்வில மயானத்திற்கு அருகில், லொறியொன்று நிறுத்தியதன் காரணமாக லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.