புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் இளம்தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி!! குழந்தைக்கு நடந்தது என்ன?

பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து தனக்குத் தானே தீவைத்து உயிரை மாய்க்க முயன்றார் என்று
தெரிவித்து ஒன்றரை வயதுக் குழந்தையின் தாயார் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் தனது குழந்தையையும் அழைத்துச் சென்று அடர்ந்த பற்றைக்குள் இவ்வாறு தனக்குத் தானே
தீவைத்தார். எனினும் அவர் குழந்தையுடன் அவர் பற்றைப் பகுதிக்குள் ஓடிச் செல்வதை அவதானித்த
அயலவர்கள் விரைந்து செயற்பட்டதால் அவரது ஒன்றரை வயதுக் குழந்தை எந்தவொரு பாதிப்புமின்றி
காப்பாற்றப்பட்டது என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

கிளிநொச்சி விசுவமடுவைச் சேர்ந்த பிரசாந்தன் மேனகா (வயது -20) என்ற இளம் தாயாரே
இவ்வாறு உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. உடனடியாக அவர் கிளிநொச்சி
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவரது உடலில் 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டதால்
சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது.

அதனால் இளம் தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று இரவு மாற்றப்பட்டார்.
அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

குடும்பத்தகரறாறு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.