மின்சாரம் தாக்கி க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.15 மணியளவில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் கண்ணதாசன் இராகுலன் (வயது-18) என்ற மாணவனே உயிரிழந்தார்.
வீட்டில் வளர்க்கப்படும் ஆடு குட்டி ஈன்றதனால் அதனை வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட போது பலா மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழில் ஏற்பட்ட மின் ஒழுக்கு மாணவனை தாக்கியது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.




