கிசு கிசுபுதினங்களின் சங்கமம்

சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட 14 வயது மாணவி மீண்டும் இன்னொரு காமுகனால் சீரழிக்கப்பட்டது ஏன்?

இரத்­தி­ன­புரி நக­ரி­லுள்ள பிர­பல பாட­சாலையொன்றில் கல்வி பயிலும் 14 வய­தான மாண­வி­யுடன் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் 24 வய­தான இளைஞர் ஒரு­வ­ரையும் இதே மாண­வியை கடந்த இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக கூறப்­படும் மாண­வியின் சிறிய தந்தை ஒரு­வ­ரையும் இரத்­தி­ன­புரி பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து இரத்­தி­ன­புரி நீதி­மன்­றத்தில் நேற்று முன்­தினம் ஆஜர் ப­டுத்­தப்­பட்டபோது சந்­தேக நபர்­களை எதிர்­வரும் 13 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நப­ரான இளைஞர் மேற்­படி மாண­வியை வேவல்­வத்த பகு­திக்கு நேற்று முன்தினம் மோட்டார் சைக்­கிளில் அழைத்து சென்ற போது வேவல்­வத்த பொலிஸார் அந்தப் பிர­தே­சத்தில் மேற்­கொண்ட திடீர் சோத­னையின் போது இவர்­களை தடுத்து விசா­ர­ணையை மேற்­கொண்ட போதே குறித்த இளைஞர் தன்­னிடம் தகாத முறையில் நடந்து கொண்­ட­தாக இம்­மா­ணவி தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து இரு­வ­ரையும் வேவல்­வத்த பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துச் சென்று மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்ட போதே இம்­மா­ண­வியை அவ­ரது சிறிய தந்தை இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது வீட்டில் வைத்து பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­துள்­ளமை தெரியவந்­தது.

இத­னை­ய­டுத்து இரு­வரும் கைது செய்­யப்­பட்­டனர். இரத்­தி­ன­புரி பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வருகின்றனர்.