புதினங்களின் சங்கமம்

சற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து!! ஒருவர் உயிரிழப்பு (video)

யாழ்பாணம் – தீவகம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை 5 மணியளவில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையாக இடம்பெற்றது.

மூவரும் காரில் மண்கும்பான் சாட்டிக் கடற்கரைக்குச் சென்று திரும்பும் போதே இந்த விபத்து
இடம்பெற்றது.

வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார், வீதியோரம் உள்ள கட்டைகளுடன் மோதுண்டு கடலுக்குள் பாய்ந்த்து என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். சாரதி உள்பட இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Image may contain: car and outdoorImage may contain: car and outdoorImage may contain: one or more people, people standing, child, sky, outdoor, nature and waterImage may contain: outdoor