புதினங்களின் சங்கமம்

கூட்டத்தில் ஆபாச படம் பார்த்த எம்.எல்.ஏ! அதை அப்படியே அம்பலப்படுத்திய காட்சி!! (Video)

இந்தியாவில், காங்கிரஸ் எம்.எல்.சி.பிரகாஷ் ராத்தோட், அம்மாநில சட்ட மேலவையில், மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த காட்சிகள், சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அந்த மாநில சட்ட மேலவை கூட்டத் தொடர் நடந்து வருகிறது.

நேற்று, பரபரப்பாக விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில், காங்கிரஸ் எம்.எல்.சி., பிரகாஷ் ராத்தோட், தன் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த காட்சிகளை படம் பிடித்த, தனியார், தொலைக்காட்சி அதை அப்படியே ஒளிபரப்பியது. இதை பார்த்த பலரும், எம்.எல்.சி.,க்கு கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து, அவர் கூறுகையில், மொபைல் போனில் இடம் இல்லாததால், படங்களையும், வீடியோ’க்களையும் அழித்து கொண்டிருந்தேன்.

ஆபாச வீடியோ பார்க்கவில்லை. அதை பார்க்கும் அவசியமும் இல்லை. பார்க்கவும் மாட்டேன். எனக்கு யாரும் அனுப்பவும் இல்லை என்று விளக்கமளித்தார்.

இதற்கு முன், பா.ஜ., ஆட்சியின் போது, மூன்று, பா.ஜ. க எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்தனர். அதன் பின், காங்கிரஸ்எம்.எல்.சி.ஒருவரும், சட்ட மேலவையில் ஆபாச வீடியோ பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.