யாழ்ப்பாணச் சனம் ஒரு brand பைத்தியங்கள்!!!
யாழ்ப்பாணச் சனம் ஒரு brand பைத்தியங்கள் ஆனால் அதில ஒரு பெருமையிருக்கு. சும்மா சொல்லக்கூடாது சைக்கிள் என்றால் றலி இங்கிலன்ட் ,ரீவி என்றால் சொனி யப்பான், ரேடியோ என்றால் பனசோனிக் யப்பான்.
அதுகும் அந்த இரண்டு பற்றி ரேடியோவில அப்படியொரு பெரும் காதல் .இப்பவும் சில வயதுபோனதுகள் கறி பாக்கிற்குக்குள்ள கொண்டு திரியினம்.
கரண்ட் இல்லாத காலம் பொருளாதார தடையால யாழ்ப்பாணம் அடைபட்டுக் கிடந்தகாலத்தில அருமை பெருமையா கிளாளிக்கால கொண்டுவந்த எவறடி பற்றிய கொழுவி செய்தியக் கேட்பம்.
பாட்டுக்கேட்டால் வீட்டில கிழி விழும் காரணம் பற்றி இறங்கப்போகுது என்று. அதோட சவுண்டயும் கூட்ட விடமாட்டினம்
கறண்ட் போடும்.
இரவு 7.15 மணி வெரித்தாஸ் செய்தி அதை தொடர்ந்து வாற ஆகாசவானி செய்தி, பிபிசி செய்திகளை கொஞ்சம் சவுண்டா கேட்டுட்டு குட்டி அரசியல் ஆய்வோட எல்லாரும் படுக்கைக்கு போவம்.
இப்ப நினைத்துப்பார்க்கும் போது எத்தகைய கடினமான காலத்தில் வாழ்ந்திருக்கிறம் ஆனால் எவ்வளவு பொறுமையாக சகிப்புத்தன்மையோட உள்ளதை வைச்சு எளிமையாக வாழப்பழகி இருந்தோம் என்பதை நினைச்சால் இப்பவும் இனம்புரியாத சந்தோசமும் பெருமையுமாக இருக்கு. 


நன்றி
பேஸ்புக் பதிவு

