புதினங்களின் சங்கமம்

நல்லுார் குடும்பநல மாதுவின் கணவனுக்கு கொரோனா!! முடக்கபடுமா அலுவலகம்???

நல்லுார் பிரதேச பொதுசுகாதார பணிமனையின் கீழ் பணியாற்றும் குடும்பநல மருத்துவ
மாதுவின் கணவருக்கு கொரோனா தொற்று..! பணிமனை முடக்கப்படுமா..?

யாழ்.நல்லுார் பொது சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் கீழ் பணியாற்றும் குடும்பநல
மருத்தவ மாதுவின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கும் நிலையில்,

குறித்த குடும்பநல மருத்துவ மாது கூட்டங்கள் சிலவற்றில் கலந்துகொண்டதுடன், வேலை இடத்தில்
பலருடன் பழகிய நிலையில் நல்லுார் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் பணியாற்றும்

பலருக்கும் நேற்றய தினம் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று மாலை
பீ.சி.ஆர் முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பாதகமான முடிவுகள் கிடைத்தால்

நல்லுார் பொது சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை முடக்கப்படும் நிலை ஏற்படும்.