Home புதினங்களின் சங்கமம் யாழ் வடமராட்சி வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ரோலரில் சிக்குண்டு பலியான பரிதாபம்!

யாழ் வடமராட்சி வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ரோலரில் சிக்குண்டு பலியான பரிதாபம்!

யாழ்ப்பாணம் கொடிகாமம் புலோலி வீதி அமைப்பு பணியில் ரோலர் இயந்திரத்தில் சிக்குண்டு பலாங்கொடையைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் வடமராட்சி முள்ளிப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் 62 வயதுடைய பலாங்கொடைச் சேர்ந்த பி. பிரேமரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.

புலோலி – கொடிகாமம் வீதிப் புனரமைப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முள்ளிப்பகுதியில் ஈடுபட்டிருந்தபோது பணியாளர் ஒருவர் ரோலர் இயந்திரம் அவர் மீது ஏறி அதன் காரணமாக படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.