சைக்கிள் கட்சியிலிருந்து விலத்தப்பட்ட மணிவண்ணன் பாய்ச்சல்!! முன்னணி ஒருசிலருக்கு மட்டும் சொந்தமல்ல!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் நிலவும் சர்வாதிகார, ஜனநாயக விரோத, ஒருவர் இருவரின்
விருப்பு வெறுப்புக்களினால் இனத்தின் நலனை பலி கொடுக்கும் அரசியலே
முன்னெடுக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த, கட்சியின் பொதுச்சபையை விரைவில்
கூட்டவுள்ளேன் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டுக்ள்ள வி.மணிவண்ணன்
தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பணத்தில் அவர் இன்று நடத்திய ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர்
மேலும் தெரிவிக்கையிழ்க்,

என்னை கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்குவதாக முன்னர் கட்சியின்
மத்தியகுழுவில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தபோதும், அந்த மத்தியகுழுவில் 5
மாவட்ட அமைப்பாளர்களும், பொருளாளரும் கலந்து கொள்ளவில்லை.

இறுதியாக கூடிய மத்தியகுழுவும், எற்கனவே கூடிய மத்தியகுழுவும் ஒன்றல்ல.முன்னர் கலந்து
கொண்ட ஆட்களை தவிர்த்து, தமக்கு ஆமாம் சாமி போடும் ஆட்களை மத்தியகுழு என்ற பெயரில்
கஜேந்திரகுமார் தரப்பு அழைத்து வந்துள்ளார்கள். கட்சியில் மத்தியகுழுவிற்கு திட்டவட்டமான
வடிவமெதுவும் கிடையாது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஒரு சிலரது விருப்பு வெறுப்பிற்காக செயற்படும் குழுவாக
அல்லாமல், மக்கள் நலன் சார்ந்த அமைப்பாக மாற்ற வேண்டும்.இலட்சியத்திற்காக செயற்படுவதாக
கூறிக்கொண்டு, பதவியை பெற சூழ்ச்சி செய்யும் அமைப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தொடர்ந்து இருக்க முடியாது. கட்சிக்குள் நடக்கும் அநீதிகளை, சர்வாதிகார போக்கை கண்டும்
காணாமலும் இருந்து கொண்டு, இனத்தில் விடுதலைக்காக செயற்படுவதாக கூறி ஊரை ஏமாற்ற
முடியாது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஒரு சிலரின் சொந்த நலன்களுக்கு அமைவாக இழுத்துச்
செல்வதற்கு நான் உன்படாமையே நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம்.பல்வேறு தரப்பினரையும்
உள்வாங்கி மக்களுடைய கட்சியாக இதனை வைத்திருக்கவேண்டும் என்பது தான் என்னுடைய
நிலைப்பாடு, ஆனால் ஒரு சிலரின் சுயலாப நோக்கிற்காவே தான் வெளியேற்றப்பட்டேன்.
2010 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியபோது, சம்பந்தன் அவர்கள்
மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு சம்பந்தன் அவர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றார்,
ஏனையவர்களின் கருத்துக்களை செவிமடுக்கிறார் இல்லை என்று தெரிவித்திருந்தோம்.

அதன் பின்னர் இந்தக் கட்சி ஜனநாயக பண்பியல்புடன் செயற்படும் என்று நினைத்திருந்தோம் ஆனால்
ஒரு சிலரின் எண்ணத்தை நிறைவேற்றும் நோக்கிலேயே கட்சி செயற்படவேண்டும்.அதேபோல கட்சியின்
நிதி நடவடிக்கை தொடர்பில் காலா காலமாக தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இதனால் நிதி நடவடிக்கைகளை சரியாக கைக்கொண்டு அவப் பெயரை நீக்குவதற்காக நிதிப் பிரிவு
ஒன்றை உருவாக்க முயன்றேன். அதனையும் தனிப்பட்ட ஒரு சிலரின் விருப்புக்காக முன்னெடுக்க
அனுமதிக்கப்படவில்லை.

அதேபோல கட்சிக்கு கூடுதலாக ஆட்களை இணைக்கவேண்டாம் என்றும், தாத்தா (ஜி.ஜி.பொன்பலம்),
தந்தை (குமார் பொன்னம்லம்) ஆகியோருக்கு நேர்ந்தவையே எனக்கும் நேரும் என்ற அனுபவத்தின்
அடிப்படையில் சொல்கிறேன் என்று கஜேந்திரகுமார் வலியுறுத்தியதாகவும் மணிவண்ணன் தெரிவித்தார்.

error

Enjoy this blog? Please spread the word :)