புதினங்களின் சங்கமம்

வடக்கு கிழக்கில் இருந்து 17 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு!!

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன இத்தேர்தலில் ஓரம்கட்டப்பட்டு இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் எவ்வித ஆனசங்களையும் வெல்லவில்லை. தேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. சிறிலங்காசுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட அங்கஜன் ராமநாதன் மட்டும் ஒரு ஆசனத்தை வெற்றிபெற்றுள்ளார்.

வடக்கு கிழக்கில் இருந்து வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தும் 15 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களைவிட தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும் தலா ஒரு ஆசனம் தேசியப்பட்டியலில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. அதனால் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள். தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினரின் மொத்த எண்ணிக்கை இப்பாராளுமன்றத்தில் 17 உறுப்பினர்கள். இவர்கள் பிரிதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 10 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 02 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 02 ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 01 ஆசனம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி 01 ஆசனம்
தமிழ் தேசிய மக்கள் கூட்டணி 01 ஆசனம்

யாழ் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் செல்வோர்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி
சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்
எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்
தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
டக்லஸ் தேவனந்தா – 32,146 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31,658 வாக்குகள்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
சி.வி விக்னேஸ்வரன் – 21,554 வாக்குகள்

வன்னி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் செல்வோர்

இலங்கை தமிழரசு கட்சி
சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்
செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் செல்வோர்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
சிவனேசதுறை சந்திரகாந்தன் – 54,198

இலங்கை தமிழரசு கட்சி
சாணக்யா ராஹுல் – 33,332
கோவிந்தன் கருணாகரன் – 26,382

ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன
சதாசிவம் வியாழேந்திரன் – 22,218

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் செல்வோர்

இலங்கை தமிழரசு கட்சி
ஆர்.சம்பந்தன் – 21,422

அம்பாறை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் செல்வோர்:
அம்பாறை மாவட்டத்தில் இருந்து தமிழர்கள் யாரும் பாராளுமன்றம் தெரிவாகிவில்லை.