Vampan memesபுதினங்களின் சங்கமம்

வடக்கு, கிழக்கு இளைஞர்கள் வீட்டில் செக்ஸ் வீடியோ பார்ப்பதாலேயே இணைய வேகம் குறைகின்றதாம்!! அதிகாரி கூறுகின்றார்!!!

!

வடக்கு, கிழக்கு உட்பட பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் இணைய வேகம் மிகவும் மந்தகதியாகவும், சிலவேளை தொழிற்படாமலும் இருப்பதற்கு காரணம் ஊரடங்கு சட்ட நேரத்தில் இளைஞர்களும் குடும்பஸ்தர்களும் கிளுகிளுப்பான வீடியோக்களை தங்களது தொலைபேசிகளில் பார்வையிடுவதே காரணம் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பொறியியலாளரா உள்ள ஒருவர் தனது நண்பனுக்கு தெரிவித்துள்ளாராம். தற்போது தென்னிந்திய தொலைக்காட்சிகளில் சீரியல்களும் நிறுத்தப்பட்டுள்ளதால் தொடர்ச்சியாக தொலைபேசியில் இணையத்தளங்களையும் சமூகவலைத்தளங்களையும் பெண்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை வீட்டில் உள்ள ஆண்கள் ஒதுக்குப்புறமான இடங்களாக தாமாகவே சென்று இருந்து கொண்டு கிளுகிளு.. அஜால் குஜால் வீடியோக்களை தொடர்ச்சியாக பார்த்து வருவதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தமது .இணைய வேகத்தை சீர்செய்ய முடியாது திணறிவருவதாக குறித்த பொறியியலாளர் தெரிவித்துள்ளாராம். இணைய வேகத்தை அதிகரிக்க ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பொறுப்பு மிக்கவர்கள் ஆண்களின் தொலைபேசியை பறித்து வைத்திருந்தாலே ஓரளவு இணைய வேகத்தை சீராக்க முடியும் என அவர் கருத்து தெரிவித்துள்ளாராம்……

இதே வேளை உலகத்தில் உள்ள பிரபல நாடுகளில் எவ்வாறான சூழ்நிலையிலும் இவ்வாறு இணைய வேகம் குறைவதில்லை என்றும் இலங்கையில் உள்ள பிரபல தொலைதொடர்பு நிறுவனம் தனது குறையை சீர்செய்யாது இவ்வாறு வாடிக்கையாளர்களை கேவலமான முறையில் குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது என அந்த பொறியியலாளருக்கு நண்பன் ஏசியுள்ளதாகவும் தெரியவருகின்றது.