புதினங்களின் சங்கமம்

இன்றைய இராசிபலன்கள் (23.01.2020)

மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார். சாதிக்கும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. வியாபாரம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவியாக இருப்பார். நன்மை நடக்கும் நாள்.

கடகம்: கனிவாகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவரிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாளாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.

சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தி யோகத்தில் பணிகளை முடிக்க போராட வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

துலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடையே மதிப்பு மரியாதை உயரும். நிம்மதி கிட்டும் நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

மகரம்: கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் வீண் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

கும்பம்: எந்த காரியத்தையும் திறமையாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மீனம்: உங்கள் செயல்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புது தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள் இனிமையான நாள்.