புதினங்களின் சங்கமம்

வேலையற்ற வன்னிப் பட்டதாரிகளை முட்டாளாக்கும் முயற்சியில் ஆனந்தராஜ்..!

வடமாகாண பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை முன் வைக்கப் படவுள்ளதாகவும் இதற்கான வடமாகாணத்திலுள்ள அரச நியமனம் கிடைக்கப் பெறாத பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை 11.01.2020 காலை 10 மணிக்கு வவுனியா நகர மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாகவும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான பட்டதாரிகள் எனும் அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் ஊடாக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் நேரடியாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பட்டதாரிகளின் அரச நியமனத்தை குறுகிய காலப்பகுதிக்குள் உறுதிப்படுத்திக் கொள்வதாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இவ் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான பட்டதாரிகள் எனும் அமைப்பே கடந்த காலத்தில் ரிஷாட், மஸ்தான் போன்றவர்களுடன் இணைந்து வாக்குப் பொறுக்கும் வேலையில் ஈடுபட்டதுடன் இணைந்து செயற்பட்ட பட்டதாரிகளையும் நடுரோட்டில் விட்டது.

அத்துடன் மீன்பிடி உதவி நிறுவனம் எனும் பெயரில் பல கோடிரூபாய் பணத்தை ஏப்பம் விட்ட ஆனந்தராஜின் மீது நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளும் உள்ளன.

அதுமட்டுமன்றி கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த இவ் அமைப்பு தற்போது போக்கிடம் இன்மையால் நான்கு பேரைக் கொண்ட புதிய கட்சியையும் ஆரம்பித்துள்ளது.

மக்களின் பணத்தில் தனக்கு வீடு, வாகனம் என வாங்கி உல்லாசம் அனுபவிக்கும் இவனை நம்பி உங்கள் எதிர்காலத்தை இழக்கப் போகிறீர்களா?

கடந்த தேர்தல் காலத்தில் மோசடிகாரன் என்பதால் கோட்டாவால் துரத்தப்பட்டு போக்கிடமின்றி சஜித்திடம் ஓடிய போதும் அங்கும் இவனை மனிதனாகக் கூட மதிக்கவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தியபடி வாழும் இம் மோசடிக்காரன் வன்னிப் பிரதேசத்தை சேர்ந்தவன் அல்ல.

எனவே இவன் போன்ற விஷக் கிருமிகளை கைது செய்ய பொலிசார் முன்வர வேண்டும் என்பதுடன் இவன் போன்றவர்களை சமூக நலன் விரும்பிகள் ஊரைவிட்டுத் துரத்த வேண்டும்.

பணத்துக்காக எதையும் செய்யும் இவன் போன்றவர்களை நம்பி உங்களின் எதிர்காலத்தையும் பணத்தையும் தொலைக்காதீர்கள். இவன் பற்றிய மேலதிக தகவல்களுக்கு,

கெளரவ டக்ளஸ் தேவானந்தா (அமைச்சர்) – 077778191
கெளரவ காதர் மஸ்தான் (பா.உ) – 0777488222
கெளரவ ரிஷாட் (பா.உ) – 07774875504
கெளரவ சிவசக்தி ஆனந்தன் (பா.உ) – 0714347480
கெளரவ உதயராசா (ஸ்ரீடெலோ செயலாளர்) – 0777774471