மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்(Photos)
காலங்களை கஸ்டநிலையில் கடத்தி தனது பிள்ளைகளை வாழ வைக்க துடிக்கும் ஒரு ஏழைத் தாய்க்கு இறைவனும் தனது கருனை நிறைந்த அருளை காட்டாதீருப்பது வேதனை அளிக்கிறது. இன்னிலையில் தொடரும் வாழ்க்கையில் ஒரு பிள்ளையை பறி கொடுத்த படி துடிக்கும் தாய்மையின் மனவேதனை நிறைந்த இன்நிலை வேறு யாருக்கும் நிகழக் கூடாது.
கடந்த 12/03/2019 அன்று சாதாரண தலைவலி காய்ச்சல் எனும் அறிகுறியோடு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் 12 வயதுடைய கமலதாசன்_கிபர்ணிக்கா
வைத்தியர்களினால் பரிசோதிக்கப்பட்டு நோய்க்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வைத்தியசாலையில் தங்கிட நேர்ந்தது .
சிறுமிக்கு இருக்கும் நோய்யினை வெளிப்படுத்தாத நிலையில் கடைசியாக சிறுமியின் ஈரலில் பாதிப்பு இருப்பதாக வைத்தியர்களால் சொல்லப்பட்ட வேளை சிறுமியின் உடல் நிலையில் பாதிப்பு எதுவும் இல்லாததால் 15/03/2019 அன்று வீடு திரும்பியுள்ளார்…
இன்லையில் மீண்டும் சிறுமிக்கு தலைவலியானது கூட சிறுமியின் நிலையறிந்த தாய் 22/03/2019 அன்று மீண்டும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு அன்றே மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு 27ம் வாட்டில் அனுமதிக்கப்படுகிறார் அங்கும் வைத்தியர்கள் சிகிச்சை அளிக்கும் நிலை தொடர சிறுமியின் தலைவலி குறைந்த நிலையில் இல்லாதால் தினமும் அழுத வண்ணமே இருந்திருக்கிறார் அங்கும் சிறுமியின் உண்மையான நோயைக் கண்டு பிடிக்க முடியவில்லை .
இதே தருணம் 24/03/2019 சிறுமியின் மாமா முறையான நபர் ஒருவர் மாலை 6. மணிக்கு சிறுமியைப் பார்வையீட சென்றுள்ளார் அவர் செல்லும் போது சிறுமி சத்தமிட்டு அழுத நிலையில் இருப்பதை பார்த்து குறித்த நபர் சிறுமி அனுமதிக்கப்பட்ட 27 வாட்டுக்கு பொறுப்பான நபரை அணுகி சிறுமி கஸ்டப்படும் நிலையை சொல்லி இருக்கிறார் அதற்கு 27ம் வாட்டிற்கு பொறுப்பான நபர் சொல்லி இருக்கிறார் வைத்தியர் மாலை 7மணிக்கு வருவார் வந்த பிறகு சிகிச்சை அளிக்கப்படும் என கூறியுள்ளார் அந்த பொறுப்பாளர்..
பார்க்கப்போன நபரின் வாக்குமூலம் இவ்வாறாக இருக்கிறது தொடர்ச்சியாக கையடக்க தொலைபேசியில் நேரத்தைக் கழிக்கும் ஊழியர்களும் பொறுப்பாளர்களும் நோயாளர்களின் நிலைகளை கவனிக்காது தங்களுடைய வேலைகளை மட்டுமே பார்ப்பதாகவும் இது தொடர்நேது தான் அவதானித்ததாகவும் அவர் மனவேதனையில் குறிப்பிட்டுள்ளார்…
இதே நிலையில் 24/03/2019 6.30 மணிக்கு பிறகு சிறிது நேரம் கழித்து சிறுமி மயக்க நிலையை அடைய விசேட பரிசோதனை பிரிவுக்குள் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அவதானி தாய் தனது மகளுக்கு என்ன ஆனாது என கதறி அழுது துடிக்க யாருமே உண்மையை சொல்ல மறுத்துள்ளார்கள் 25ம் திகதியும் சிறுமி அதே அவசர சிகிச்சைப்பிரிவிலே இருந்திருக்கிறார் எந்த நிலையில் இருந்தார் என்பதை தங்களால் உறுதிப்படுத்த முடியாத நிலையே தோன்றியுள்ளது வைத்தியர்களுக்கு….
இதே நிலையில் சிறுமியின் சொந்த மாமா 25 அன்று வைத்திய சாலையில் நிற்கும் நேரம் தன்னை வைத்தியர்கள் கூப்பிட்டு சிறுமியின் நிலை ரெம்ப கவலைக்கிடமாக இருப்பதாகவும் தங்களால் எதுவும் செய்ய முடியாதுள்ளதாகவும் கூறியிருக்கிறார்கள் ஒரு கடிதத்தில் கையொப்பமும் வாங்க முனைந்திருக்கிறார்கள் கொடுக்க மறுத்த மாமா சொல்லி இருக்கிறார் 22ம் திகதி அனுமதிக்கப்பட்ட பிள்ளைக்கு என்ன வருத்தம் இருக்கின்றது என்பதை கூட இன்னும் நீங்கள் அறிய முடியவில்லையே அப்படியானல் எதற்கு வைத்தியசலைக்கு வரவேண்டுமென தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நேரம் …
பிள்ளையின் உயிர் போகும் கடைசி நிலையில் இருக்கும் போது தான் வைத்தியர்கள் சொல்லி இருக்கிறார்கள் சிறுமியின் தலையில் ஒரு கட்டி வளர்ந்த நிலையில் இருந்து தற்போது வெடித்து விட்டதால் அதன் கழிவு தலை முழுதும் பரவியுள்ளது வைத்தியர்கள் சொன்னதாக சிறுமியின் மாமா கூறுகின்றார் ..
இதற்கு பிறகு 25/03/2019 அன்று அதாவது நேற்று நள்ளிரவு 1.மணிக்கு பிள்ளை இறந்து விட்டதாக வைத்தியர்கள் தங்களுக்கு அறிவித்திருக்கிறார்கள் என கனத்த கண்ணீரை அழுகை மூலம் கொட்டியபடி பேசியிருந்தார் ஒரு சாதாரண காச்சல் என அனுமதிக்கப்பட்ட பிள்ளையை இன்று பிணமாக கையில் கொடுத்திருப்பது எவ்வளவு கொடுமை எனவும் இதற்கு சரியான சட்ட நடவடிக்கை தான் எடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டார் அவர் மேலும் குறியதாவது இன்று தங்களின் அன்பிற்கு இனிய பிள்ளையை வைத்தியர்ளின் அசமந்த போக்கில் நாங்கள் இழந்து தவிப்பது போல் இனிமேல் யாருக்கும் நடந்திடக்கூடாதென உருக்கமான செய்தியை தெரிவித்தார்
மேல் குறிப்பிட்ட சோக சம்பவத்தை பார்க்கும் போது வைத்தியர்கள் மீதும் வைத்தியசாலை மீதும் கடும் கோபம் வந்தே நகர்கிறது காரணம் 12/03/2019 தொடக்கம் 25/03/2019 இடைப்பட்ட சுமர் 14 நாட்களில் ஒரு பிள்ளையின் உடம்பில் இருக்கும் நோய் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாத அதிநவீன பொருட்கள் அடங்கிய வைத்தியசாலையும் மக்களின் வரிப்பணத்தில் வயிற்றை வளர்க்கும் வைத்தியர்களும் மேலதிக ஆட்களும் இனியும் என்னத்த புடுங்கிடப்போறீங்க என்றுதான் கேட்க வேண்டி இருக்கிறது இலவச வைத்தியம் எனும் ஓர் படுகுழி வேலை…
அன்பார்ந்த மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகளே கடவுளுக்கு அடுத்த தகுதியில் வைத்துப் பார்க்கும் உங்களின் அசமந்த போக்கில் நாளாந்தம் ஒரு குழந்தையேனும் இறந்து தான் போகிறது இதற்கான காரணம் என்ன அல்லது தீர்வு என்ன என்பதை மனிதநேயத்தோடு சிந்தித்து பாருங்கள் இந்த நிலை தொடர்ந்து நடந்தெறியே வருகிறது வைத்திய அமைச்சோ அல்லது வைத்திய உயர்நிலை அதிகாரிகளோ கண்டுகொள்ளது வேடிக்கைப் பார்ப்பது வேதனையளிக்கிறது…
கீழே குறித்த இரு வைத்தியசாலை பொறுப்பாதிகாரிகளால் கொடுத்த பிள்ளையின் நோய்க்கானதும் மரணத்துக்கானதுமான காரணம் அடங்கிய கையேடு இனைக்கிறேன் இந்த நிலையை மாற்ற மக்களே முன்வர வேண்டும்…..