புலம்பெயர் தமிழர்

சங்கிலி மன்னனின் வாரிசாம்!! ஒல்லாந்து விசரனின் திருவிளையாடல்!! (Photos)

ஒரு ராஜா சங்கிலியனின் முடிக்குரிய வாரிசு என்று இப்போது உரிமை கோருகிறார். 1964 இலங்கையில் பிறந்து நாவலப்பிட்டி, மொரட்டுவ, கொழும்பு பாடசாலைகளில் கற்று 1987 ஒல்லாந்துக்கு புலம்பெயர்ந்த Raja Remigius Kanagaraja. 6 நூற்றாண்டுக்குமுதல் போர்த்துக்கேயரால் தோற்கடிக்கப்பட்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் வம்சத்துக்கு இப்போது உரிமை கோருகிறார். தென்னாசியாவில் இருந்த சில அரச வம்சங்கள் இந்திய சுதந்திரத்துக்குப்பிறகு இந்திரா காந்தியால் செல்லாதவையாக்கப்பட்டன. ஈழத்தில் காலனியாதிக்க அரசுகளோடேயே அரசவம்சங்கள் அழிந்தன. சங்கிலியனின் உடன் குடும்ப உறுப்பினர்கள் சிலரை போர்த்துக்கலுக்கும் எடுத்துச்செல்லப்பட்டனர். இந்த ராஜா கனகராஜாவுக்கு யாழ்ப்பாண சீவியம் இல்லை. 23 வயதில் அவர் ஒல்லாந்துக்கு சாதாரண commoner போல போய் அகதி அந்தஸ்து கோரியிருக்கும் வாய்ப்புக்களே அதிகம். அவரது 20 களில் இவரது உயிருக்கு ஆபத்து இருந்ததாக இவர் கூறும் காரணங்களும் கவனமான ஆய்வுக்குரியது.

Image may contain: 2 people, people smiling, hat
6 நூற்றாண்டுகளாக உரிமை கோரப்படாத ஒருமுடியை இப்போது கோருவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆனால் ராஜா கனகராஜா சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன்போல் தீவிரமாக உள்ளார். அவர் ராஜாத்தொழிலை வரித்துக்கொண்டபின் அவரது முதல்மனைவி அவரை விட்டு விலகிவிட்டார். 2004 முகநூலின் வருகையோடே ராஜாவின் முயற்சி தீவிரமாகிறது. முகநூலில் அரச ஆடை costume கள் அணிவது அவரது முக்கியமான செயல். தன்னை ஒரு Virtual Reality ராஜாவாக மட்டும் செயல்படும் நிலையில் அவர் இல்லை. பலர் அவரை ஒரு கோமாளியாக நினைத்தாலும் ராஜா கனகச்சிதமாகவும் தீவிரமாகவும் உள்ளார். இவ்வகையில் அவர் ஒரு 14 ம் நூற்றாண்டு கிஸ்பானிய சாகச கனவுக்காரன் Don Quixote போலுள்ளார்.
ஒரு புனைகதையாசிரியரும் Fashion studies நித்திய மாணவனுமான எனக்கு ராஜா கவனத்துக்குரியவராக வருவதற்கு காரணம் இதுதான்.

Image may contain: 3 people, indoor

2009 போர் முடிவின் பின் ராஜா தன் முயற்களை தீவிரப்படுத்தி இன்று ஜெனீவாவில் தன் முதல் பகிரங்க நிகழ்வை வழங்கியுள்ளார். Ceremonial நிலையில்தான் முடியை அவர் கோருகிறார். சனநாயக ஆட்சிப்பகிர்வில் ceremonial ராஜாக்களுக்கு இருக்கும் பங்கை நானும் அங்கீகரிக்கிறேன். இது சனநாயகத்தை இன்னும் செழுமைப்படுத்தும். ராஜாவின் முடிக்குரிய உரிமை கோரலை இன்னமும் யாழ் வரலாற்றறிஞர் யாரும் தீவிரமாக கேள்விக்குட்படுத்தவில்லை. யாரும் ராஜாவுக்கு போட்டியாக எதிர் கோரலும் வைக்கவில்லை. அதுவரையும் நானும் ராஜாவுக்கு பின்வரும் வழிகளில் உதவதயாராக உள்ளேன்.

Image may contain: 1 person
1. ராஜா ஆரியச்சக்கரவர்த்தி வாரிசாக வரும்பட்சத்தில் கவிஞனான யான் அரண்மனையின் ஆஸ்தான கவியாக வரத்தயாராக உள்ளேன்.
2, Jaffna Fashion&Cuisine (Virtual) University இன் Founder Professor ஆன யான் ராஜாவின் Personal Royal Stylist ஆக உதவமுடியும். இவ்வகையில் ராஜாவின் அரச costumes சம்பந்தமாக சில ஆலோசனைகள்.

Image may contain: 1 person
(அ) இதுகாலவரையான ராஜாவின் முகநூல் costume கள் 19ம் நூற்றாண்டுக்குரியவை. நான் ராஜாவுக்கு முகாலய சாம்ராஜ்ய 14 ம் நூற்றாண்டு உடைகளை சிபாரிசு செய்கிறேன். (இணைப்பு படங்களில் பார்க்க)

Image may contain: 3 people
(ஆ) ராஜா Gym போகிறவர் என்பது படங்களில் தெரிகிறது. இதை தீவிரப்படுத்தி 6 pack Topless படம் போடும்வரை போகணும். வெப்ப யாழ் சுகாத்தியத்தில் சங்கிலிய மன்னனின் உடை Topless தாறுவாச்சி கட்டிய பட்டுவேட்டிதான்.

Image may contain: 1 person, indoor
(இ) ராஜா கனகராஜா கட்டாயம் குதிரையேற்றம் பயிலவேண்டும். தாறுலாச்சி Topless வேட்டிகட்டி பொன்சரிகை தலைப்பாகையுடனும் கவச குண்டலங்கள் காப்புகள் சகிதம் பரியேறிய ராஜா ஏறத்தாழ முடியைக் கைப்பற்றிய மாதிரித்தான்.

Image may contain: 2 people
(ஈ) ராஜாவுக்கு ஒரு ராணி வேண்டும். தென்னாசியாவில் அரச பெண்டிர் அரிது என்பதால் சினிமா நடிகைகளான திரிசாவோ அவா முகச்சாயல் கொண்ட பெண்ணோ பொருத்தமாயிருக்கும்.

இந்தக் கோமாளியை சில ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் பெரிதாக்குவதற்கு காரணம் இவனிடம் இருந்து பெறும் பணத்துக்காகவே. இதில் வீரகேசரி ஊடகவியலாளர் என கூறி விஜயகலாவுக்கு வால் பிடிக்கும் கஜனும் அடக்கம்.

– நட்சத்திரன் செவ்விந்தியன்

Image may contain: 1 person, hat

Image may contain: 1 personImage may contain: 1 personImage may contain: 1 person, standing