புலம்பெயர் தமிழர்

நியூசிலாந்து பெண்களுடன் பாலியல் லீலை!! இலங்கை காவாலிக்கு நடந்த கதி!!

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் இலங்கை நபர் ஒருவருக்கு மீண்டும் சிறைத்தண்டனை
வழங்கியுள்ளது நியுசிலாந்து நீதிமன்றம்.

தம்மஹெட்டி முதலிகே எனும் 34 வயது நபர், இதற்கு முன்னரும் 14 மாதங்களுக்கு முன்பாக
இவ்வாறு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பின் நிபந்தனையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
எனினும், தொடர்ந்தும் பேருந்தில் தன்னோடு பயணிப்பவர்கள், வேலைத்தளத்தில் உள்ள பெண்களிடம்
அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் மீண்டும் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல பெண்களிடம் அத்துமீறி நடக்க முற்பட்டதன் பின்னணியில் இம்முறை பரோலிலும் வெளி வர
முடியாதபடி 17 மாதங்கள் குறித்த நபருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.