புதினங்களின் சங்கமம்

பெண் விதானையும் விதானையின் தாயும் கணவரால் அடித்துக் கொலை

இலங்கையின் திஸ்ஸமஹாராமை சந்துன்கம பகுதியில் தனது மனைவியையும், மனைவியின் தாயையும் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (23-03-2019) சனிக்கிழமை காலை 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப சண்டை காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில், கிராம சேவகராக பணியாற்றிய 25 வயதுடைய பெண்ணும், அவருடைய தாயாரான 54 வயதுடையவரும் கொலை செய்யப்பட்டுள்ளாத அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவரான 28 வயதுடையவர், இராணுவத்தில் பணியாற்றி பின்னர், அதிலிருந்து வெளியேறியவர் என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.