வவுனியாவில் நீதிமன்ற கூண்டுக்குள் நடந்த கொடூரம்!!
வவுனியாவில் நபர் ஒருவர் ஆறு மாதம் சிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த சம்பவம் நடந்தேறியுள்ளது. குறித்த சம்பவத்தில் கே.லக்ஸ்மன் வயது 33 என்ற நபரே இவ்வாறு விபரீத செயலை புரிந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நீதி மன்றில் நேற்றய தினம் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்றயதினம் வவுனியா நீதி மன்றிற்கு வழக்கு நடவடிக்கைகளிற்காக சென்றநபர் ஒருவர் நீதி மன்றின் நடவடக்கைகளிற்கு குழப்பத்தை விளைவித்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் அவருக்கு ஆறுமாதம் சிறைதண்டனை விதித்து தீர்பளிக்கபட்டுள்ளது.
இதன்நிமித்தம் பொலிசாரால் அவர் நீதி மன்ற கூண்டுக்குள் அடைக்கபட்டார். இதன்போது தனது பையில் வைத்திருந்த சிறிய பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். காயமடைந்த அவரை மீட்ட போலிசார் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.