புதினங்களின் சங்கமம்

வாழைச்சேனையில் அடித்து தொங்கவிடப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் மீ்ட்பு!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்திலுள்ள வீடொன்றின் பின்னாலுள்ள மரத்தில்
தொங்கவிடப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலங்குளம் கிராமத்தில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சின்னையா
சுப்பிரமணியம் என்பவரின் சடலமே இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி தெரிவிக்கையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் சில நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் நண்பகலளவில் வீடு திரும்பிய நிலையில் அவர் சில
நபர்களால் தாக்கப்பட்டது குறித்து வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தேன்.

இதேவேளை சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எனது கணவர் வீட்டின் பின் வளவிலுள்ள ஆத்தி
மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாக காணப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் தீவிர
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.