புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் யுவதிக்கு நடந்த கேவலம்.!!

கிளிநொச்சி ரயில் நிலையத்தின் ஊழியர்கள் சிலர் மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி தன்னுடன் அநாகரீகமான நடந்து கொண்டதாக யுவதி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று காலை கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு தன்னுடைய இயலாத தாயாரை அழைத்துக்கொண்டு சென்ற யுவதி ரயிலில் தாயாரை ஏற்றிவிட்டு திரும்பும் போதும் ரயில் நிலைய ஊழியர் ஒருவர் மேடை டிக்கட் எங்கே என வினவியுள்ளார்.

இதன் போது தான் மேடை டிக்கட் எடுக்கவில்லை என்றும், குறித்த நடைமுறையை தான் அறிந்திருக்கவில்லை என்றும் இயலாத தாயை ரயிலில் ஏற்றிவிடவே உள்ளே வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் உனக்கு ஏற்கனவே கூறியது தெரியாதா? நீ உள்ளே வருவதாக இருந்தால் பிளட்போம் டிக்கட் எடுத்திருக்க வேண்டும் எனக் கூறிய அவர் நீ எடுக்கவில்லை எனவே குற்றப்பணத்தை செலுத்தி விட்டு போ இல்லை என்றால் பொலிஸில் முறையிடுவோம் என்றும் தெரிவித்து வாடி போடி என தகாத வார்த்தை பிரயோகங்களை பாவித்து பேசியதாகவும் யுவதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தொலைபேசி ஊடாக உறவினர் ஒருவருடன் தொடர்பு கொண்டு பணத்தை பெற்று தண்டப்பணமாக 3020 ரூபாவை செலுத்திவிட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.