யாழ் போதனா வைத்தியசாலையில் கஞ்சா கலந்த பீடியுடன் காவாலி கைது!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை பார்வையிட வந்தவரை வைத்தியசாலை காவாலாளிகள் பரிசோதித்தபோது கஞ்சா கலந்த பீடி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.