புதினங்களின் சங்கமம்

பசியின் கொடுமை தாங்க முடியாது பெண் பிள்ளையுடன் ரயில் முன்பாக பாய்வதற்கு தாய்! கடவுளாக வந்து காப்பாற்றிய பொலிஸ்!

குருநாகலில் பசியின் கொடுமை காரமாண தாயும் மகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கல்கமுவ பிரதேசத்தில் பல நாட்களாக உணவின்றி தவித்த தாயும் மகளுமே தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். எனினும் பொலிஸார் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.கணவனால் கைவிடப்பட்ட 38 வயதான பெண்ணும் அவரது 10 வயது மகளுமே இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.தாயும் மகளும் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் கண்ணீருடன் நிற்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.அவர்களை அவ்விடத்தில் இருந்து காப்பாற்றிய வேளையில், கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி ரயில் ஒன்று பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உடனடியாக பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டிருக்கவில்லை என்றால் இரண்டு உயிர்களும் பறி போயிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பெண்ணுடன் கணவனுக்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.எந்தவித வருமானமும் இல்லாத நிலையில், வீதியில் சென்றவர்களிடம் உதவி கோரிய போதிலும் எவரும் உதவி செய்யவில்லை.வீட்டில் உடல் நிலை கோளாறுடன் வயோதிப தந்தை ஒருவரும் உள்ளார். பசிக்கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை முயற்சியை எடுத்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.இதேவேளை கடந்த மாதம் வறுமையின் காரணமாக தமிழ் பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் ரயிலில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டிக்கு இடையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.