புதினங்களின் சங்கமம்

பேஸ்புக்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறுங்கள்!! அதிர்ச்சித் தகவல்களைத் தருகின்றார் அப்பிள் நிறுவன இணை இயக்குனர்!!

மக்களை பேஸ்புக்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறுமாறு அப்பிளின் இணை நிறுவுனர் ஸ்டீவ் வோஸ்னியாக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேஸ்புக் உட்பட அதன் கீழ் இயங்கும் வட்ஸ் அப் மற்றும் இன்ஸ்ரகிராம் ஆகிய தளங்கள் மக்களின் தகவல் தனியுரிமையை மீறுகின்றனவா என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து 68 வயதான ஸ்டீவ் வோஸ்னியாக் அமெரிக்காவின் வொஷிங்டன் விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

“பல தரப்பு மக்கள் உள்ளனர், மேலும் சிலருக்கு, பேஸ்புக்கின் நன்மைகள் மற்றும் தனியுரிமை இழக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

பேஸ்புக் உள்ளிட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்பது வருத்தமளிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

பேஸ்புக்கை விட்டு மக்கள் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என அப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

பயனாளிகள் தங்களுக்கு தனியுரிமை இருப்பதாக நினைக்கிறார்கள். குறுஞ்செய்திகள் அனுப்ப எனக்கு விருப்பமான விடயம் பொதுவாக எல்லோருக்கும் விருப்பமான ஒருவிடயம். ஆனால் இதில் உள்ள விபரீததத்தை எவரும் அறிவதில்லை. எங்களின் விபரங்களை வெளியிடமால் இருப்பதற்கு தொகையை கேட்டாலும் நாங்கள் அறவிட தயாரகவுள்ளோம். எங்களை நாங்களே விளம்பரப்படுத்திகொள்ளவது போல அமைந்துள்ளது.

கடந்த ஆண்டில் பேஸ்புக் நிறுவனத்திலிருந்து பயனாளிகளின் தகவல்கள் கசிந்ததாகப் பெரிய சர்ச்சை எழுந்ததனையடுத்து பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் தனியுரிமை கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மேலும் , மக்கள் தங்களது பேஸ்புக் கணக்குகளை அழித்துவிட வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வந்தனர். இந்தக் குரல்களுக்கு ஆதரவாக இருந்த முக்கியமானவர்களில் ஒருவரான அப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லமல் அவர் கடந்த ஏப்ரல், 2018 இல், தனது பேஸ்புக் கணக்கை நீக்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது.