FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழில் 18 வயது பணக்கார மாணவி ஐஸ் போதைக்கு அடிமை!! எண்ணுக்கணக்கின்றி பலருடன் உறவு!! தாயார் தற்கொலை முயற்சி!! பகுதி4

 யாழ்ப்பாணம் உட்பட தமிழர் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனையால் நம்ப முடியாத, சினிமாவில் கூட வராத சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. குறித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக வம்பனில் வெளிவரும்…

இங்கு காட்டப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ளவர்கள் கஞ்சா விற்பனையுடன் தொடர்புபட்டவர்கள். இவர்கள் BIE 9150  எனும் மோட்டர் சைக்கிளில் சென்றே இவ்வாறான செயற்பாடுகளை செய்து வருகின்றார்கள். இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யலாம்.

4 வருடங்களுக்கு முன், தென்மராட்சிப் பகுதியில் வெடிக்க தயாரான நிலையில் கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டிருந்தன. அவற்றை குறித்த பகுதியில் வைத்தவர்கள் யார் என்பதை பாதுகாப்புத்தரப்பினர் ஒரு சில நாட்களிலேயே கண்டு பிடித்தனர். கிளைமோர் வைத்தவர்கள் பயணித்த வாகனம் என சந்தேகிக்கப்பட்ட வாகனத்தையும் மீட்டனர். எவருமே காட்டிக் கொடுக்காது குறித்த நபர்கள் பிடிக்கப்பட்டது எப்படி?

அதே போல் வடமராட்சி முள்ளிப்பகுதி சந்தியில் சிறிய குண்டு 2020ம் ஆண்டு மேமாதம் வெடித்தது. அது வெடித்து ஓரிரு நாட்களிலேயே சந்தேகநபர்கள் பிடிக்கப்பட்டனர். அவர்கள் பிடிபட்டது எப்படி?

குறித்த இரு சம்பவங்களிலும், பாதுகாப்புத்தரப்பால் பிடிக்கப்பட்ட சந்தேகநபர்கள், அப்பகுதியில் காணப்பட்ட கைத்தொலைபேசி சிக்னல் அலைவரிசையை வைத்தே பிடிக்கப்பட்டார்கள். நள்ளிரவு தாண்டி குறித்த குண்டு வைப்பு சம்பவ இடங்களில் தொடர்ச்சியாக சிலரின் தொலைபேசி சிக்னல்கள் தொழிற்பட்டதை வைத்தே, குறித்த சந்தேகநபர்கள் முதற்கட்ட விசாரணை வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டு பிடிக்கப்பட்டனர்.

ஆனால் யாழ்ப்பாணம் மட்டுமல்லாது, வடக்கு, கிழக்கு பகுதிகளில் பிடிபடும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பின்னணியில், எந்த முதலைகள் இருக்கின்றன என்பதை பாதுகாப்புத்தரப்பால் அறிய இயலாது உள்ளதாம். அண்மையில் வடமராட்சி வல்லிபுரம் கோவில் பகுதியில் பற்றைக்காட்டுக்குள் மீட்கப்பட்ட 80 கோடி பொறுமதியான போதைப்பொருளை அந்த இடத்திற்கு கொண்டு வந்தவர்கள் யார் என்பதை கண்டு பிடிக்க பாதுகாப்புத்தரப்பால் முடியவில்லை என்று கூறுவது நம்ம இயலாத ஒன்றாகும். சாதாரண சிசிரீவி கமராவே இதற்கு போதுமானதாக இருக்கும்…. ஆனால்…..

யாழ்ப்பாணத்தில் 80 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது என்றால், குறித்த போதைப்பொருள் கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்களின் பண பலம், செல்வாக்கு என்ன என்பதை சாதாரணமாகவே அறிந்து கொள்ளலாம்…..

பயங்கரவாதத்தை அடியோடு அழித்தவர்கள் என்று பெருமைப்பட்டு கூறித்திரிபவர்களுக்கு, போதைப்பொருள் விநியோகத்தர்களை பிடிப்பதற்கு முடியவில்லை என்றால்…………..

யாழில் அதிகரிக்கும் போதை வியாபாரம்!! கஞ்சா விற்கும் அழகிய பட்டாதரி பெண்ணின் கதை இது!!

யாழ் சிறைக்குள் கிழவிகளால் வல்லுறவுக்குள்ளான கஞ்சா விற்கும் அழகிய பெண் பட்டதாரியின் கதையின் 2ம் பகுதி

காசோலை மோசடியில் யாழ்ப்பாணச் சிறைக்குள் மனைவி அடைக்கப்பட்டாள். வன்னியில் ஆசிரியராக கற்பித்துக் கொண்டிருந்த கணவன் யாழ்ப்பாணம் திரும்பி வந்து மனைவியை வெளியே எடுப்பதற்கு முயன்றும் பலனில்லாது 2 மாதங்கள் பிணை கிடைக்காத நிலையில் உள்ளே அடைபட்டிருந்தாள் மனைவி. அவள் சிறைக்குள் எதிர்நோக்கிய கொடூர செயற்பாடுகளை மூத்த ஊடகவியலாளர் இங்கு தந்துள்ளார்.

அந்த சிறைச்சாலை தற்போதய புதிய சிறைச்சாலை அல்ல. கண்டி வீதியில், குருநகர் சந்தைக்கு செல்லும் வீதிக்கு முன்பாக இருந்த சிறைச்சாலை. மிகுந்த நெருக்கடியுடன் கூடியது. அந்த சிறைச்சாலையிலேயே குறித்த இளம் பெண் அடைக்கப்பட்டாள். சொகுசாக செல்லமாக வாழ்க்கை நடாத்திய குறித்த பெண் அந்த சிறைக்கூடத்துக்குள் அடைக்கபட்டு, நொந்து நுாலாகியே வெளியே வந்தாள். கை, கால்களில் சிரங்கு என கூறப்படும் தோல் தொற்று நோய்க்கு இலக்காகியிருந்தாள். தலை முழுவதும் பேன் தொற்றியிருந்தது. அத்துடன் சுவாச நோய்களும் ஏற்பட்டிருந்தது. 2 மாதம் சிறைக்குள் இருந்தமை தொடர்பாக அவளை மூத்த ஊடகவியலாளர் அவளது வீட்டுக்கு சென்று விசாரித்தார்.

தான் அங்குபட்ட அவலங்களை அவள் பின்வருமாறு தெரிவித்திருந்தாள்….

இரவு சிறை அறைக்குள் அடைபட்டால் இயற்கை உபாதை வந்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது. அறைக்குள்ளேயே லஞ் சீற் அல்லது சொப்பின் பையினுள் மலசலத்தை இருந்துவிட்டு விடியும்போது அதனை எடுத்து மலசல கூடத்துக்குள் போட வேண்டும். அத்துடன் சிறுநீர் உபாதை வந்தால் மூலைக்குள் ஒரு சாக்கைப் போட்டுவிட்டு அதன் மேலேயே சிறுநீர் இருந்து விடிந்தவுடன் சிறைக்காவலர்கள் வந்து திறந்துவிடும் சிறிது நேரத்துக்குள்ளேயே அந்த சாக்கை துப்பரவு செய்து மீண்டும் உள்ளே வைக்க வேண்டும்…. நான் விளக்கமறியல் கைதி என்றபடியால் அங்கு தண்டனைக் கைதியாக இருந்த பெண்கள் இவ்வாறான வேலைகளை என்னைக் கொண்டே செய்வித்தார்கள். அவ்வாறு நான் தொடக்கத்தில் செய்ய மறுத்தேன். அவர்கள் என்னை தாக்கினார்கள். நான் கத்திக் குளறியும் யாரும் பொருட்படுத்தவில்லை. அவர்களின் அடி,உதை தாங்காது நானே அவ்வாறான வேலைகளை செய்யத் தொடங்கினேன். 2 பேர் இருக்க கூடிய அறைக்குள் 5 பேரை விட்டிருந்தார்கள். அத்துடன் பகலில் கடும் வெப்பம் தாங்க முடியாது. இரவில் மூட்டைப்பூச்சி, நுளம்பு துாங்க விடாது. அத்துடன் என்னுடன் ஒரே அறைக்குள் இருந்த கஞ்சா விற்று பிடிபட்ட 55 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் என்னை பாலியல்ரீதியாக கடும் தொல்லை கொடுக்க தொடங்கினர். அவற்றை வாயால் என்னால் சொல்ல முடியாது. இருவரும் ஆண்கள் போல செயற்பட்டனர். எனக்கு மனநிலை பாதிக்கும் நிலை வந்தது. கத்திக் குளறியும் யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் நான் சிறைக்கு சென்று 10 நாட்களின் பின்னர் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கஞ்சாவுடன் பிடிபட்டு வந்திருந்தாள். அவள் வந்த பின்னர் அவர்கள் என்னை சித்தரவதை செய்வதை நிறுத்திவிட்டனர். அவளுக்கு அந்த கிழவிகள் அடிமைபோல் செயற்பட்டனர். அவள் என்னுடன் நட்பான பின்னரே நான் ஓரளவு நிம்மதியுடன் அந்த அறைக்குள் இருந்தேன். நரக வேதனை அனுபவித்தேன்… என குறித்த பட்டதாரி பெண் மூத்த ஊடகவியலாளருக்கு தெரிவித்திருந்தாள்.

இச் சம்பவம் 2013ம் ஆண்டளவில் நடந்தது. 2020ம் ஆண்டு குறித்த ஊடகவியலாளர் அந்தப் பெண்ணை யாழ் நகரப்பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தற்செயலாக சந்தித்தார். அவரே ஆச்சரியப்படும் அளவுக்கு குறித்த பெண்ணின் நடை, உடை, பாவனைகள் மாறியிருந்தன. குடும்பப்பாங்கான அழகிய பெண்ணாக இருந்த அந்தப் பெண் சிங்கள நாகரீகப் பெண்களின் தோற்றத்துடன் காணப்பட்டாள். ஊடகவியலாளர் சந்தேகத்துடன் அவளிடம் சென்று விசாரித்த பின்னரே அந்தப் பெண்தான் இந்தப் பெண் என அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார். அங்கு அவர் மேற்கொண்ட விசாரிப்புக்களில் இருந்து குறித்த பெண் ஆசிரியராக கணவரை விவாகரத்து செய்து விட்டாள் என்பது உறுதியாகியது. அத்துடன் கொழும்பு நிறுவனத்தின் யாழ்ப்பாண கிளை ஒன்றின் அதிகாரியாக தான் உள்ளதாக கூறியிருந்தாள்.

சில மாதங்களின் பின் அந்த பெண் கூறிய யாழ்ப்பாண கிளை நிறுவனத்திற்கு குறித்த ஊடகவியலாளர் தேவை நிமிர்த்தம் சென்ற போது அங்கு அவ்வாறான ஒரு பெண் வேலை செய்யவே இல்லை என கூறியுள்ளார்கள். ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட ஆர்வமிகுதியால் குறித்த பெண்ணிண் விவாகரத்தான கணவனை சந்தித்த போது அவர் சொன்ன தகவல்களை ஊடகவியலாளருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சிறைக்குள் 2 மாதங்கள் இருந்த குறித்த பெண் அங்கு சந்தித்த சில நட்புகள் காரணமாக சிறையை விட்டு வெளியே வந்து ஒரு சில மாதங்களுக்குள் கணவனின் அறிவுறுத்தல்களையும் கேட்காது கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை என கூறி சென்றுள்ளாள். அங்கிருந்து ஒவ்வொரு வழக்கு தவணைக்கும் வந்து சென்றுள்ளாள். ஒரு வருடத்துக்கிடையில் கடன் பெற்ற பணத்தை கட்டி வழக்கிலிருந்து வெளியேறியுள்ளாள். இவ்வளவுக்கும் கணவரை சந்திக்க விரும்பவில்லை. அத்துடன் கணவனுடனான தொடர்புகளை துண்டித்துள்ளாள். வழக்கு தவணைக்கு நீதிமன்றம் வந்த போதே கணவர் அவளை சந்திக்க முடிந்தது. அந் நேரத்தில் ”உன்னுடன் வாழ விருப்பமில்லை, விவாகரத்து செய்யப் போகிறேன்” என கூறி சென்றாள். அத்துடன் அவள் சிங்கள நபருடனேயே சொகுசுகாரில் வந்து சென்றாள். அதன் பின்னர் கணவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து 2016ம் ஆண்டு விவாகரத்து நடந்துள்ளது.

தான் அறிந்த அளவில் தனது மனைவி தற்போது யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் நடைபெறும் கஞ்சா விற்பனையின் முக்கிய புள்ளியாக உள்ளதாக கணவன் தெரிவித்துள்ளார். தனது மனைவியின் பெயரில் சொகுசு வாகனங்கள் தற்போது உள்ளதாகவும் அந்த கார்களில் ஒன்று சில வருடத்திற்கு முன் நாவற்குழிப்பகுதியில் கஞ்சாவுடன் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு தனது மனைவியை பொலிசார் விசாரணைக்கு அழைத்த விடயம் தனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதன் பின்னரே மனைவியின் கஞ்சா டீல் தனக்கு தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மிகவும் அப்பாவியாக நீதிமன்றத்தில் கேவிக் கேவி அழுத அந்த அழகிய குடும்பப் பெண்ணின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது 2 மாத சிறை வாழ்க்கை என ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார்.

யாழில் 18 வயது பணக்கார மாணவி ஐஸ் போதைக்கு அடிமை!! எண்ணுக்கணக்கின்றி பலருடன் உறவு!! தாயார் தற்கொலை முயற்சி!! பகுதி4 இன்னொரு பதிவில் தருகின்றோம்…..