புதினங்களின் சங்கமம்

கைது செய்யப் போகின்றார்கள் என்ற அச்சத்தில் வைத்தியசாலையில் படுத்திருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கைது

இதேவேளை, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ஆகியோரைக் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப் படுத்துமாறு, சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாரஹேன்பிட்டவில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் இன்று (02) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர்கள் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.