யாழில் இரு காவாலிக் குழுக்களுக்கிடையில் கடும் மோதல்!! 2 பெண் காவாலிகள் உட்பட 9 பேர் படுகாயம்!! நடந்தது என்ன?
யாழ்ப்பாணம், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம் பகுதியில் இரு குழுக்களின் இடையே ஏற்பட்ட மோதலால் வெட்டுக் காயங்கள் மற்றும் அடி காயங்களுடன் 9 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குறித்த முகாமில் வசிப்பவர்களிடையே நேற்றையதினம் நிலவிய மோதல் காரணமாகவே குறித்த வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த பகுதியில் வலி.வடக்குப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ளனர்.
வெட்டுக் காயங்களுக்கு இலக்கானவர்கள் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.