புதினங்களின் சங்கமம்

மன்னாரில் கடலட்டை திருடியதாக கூறி மீனவன் ஒருவனைப் பிடித்து கட்டி வைத்து கொடூரத் தாக்குதல்!!

மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் உள்ள மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி மீனவர் ஒருவரை பிடித்து வைத்து கொடூரமாக தாக்கி வீடியோ காட்சி பதிவு செய்த நிலையில் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் திங்கள் அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. கடும் தாக்குதலுக்கு உள்ளானவர் இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வருகின்றது. சம்பவ தினமான திங்கள் அதிகாலை விடத்தல் தீவு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அட்டை பண்ணையில் குறித்த மீனவர் சென்று அட்டையை பிடித்ததாக கூறி அவரை இருவர் பிடித்து கட்டி கடுமையாக தாக்கி மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ பதிவு செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மீனவரின் நிலை என்ன என்று இது வரை தெரியவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள போதும் இது வரை பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை என தெரிய வருகின்றது.