புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய சுறா!!

முல்லைத்தீவு – அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சுறா ஒன்று இன்று சனிக்கிழமை (21) கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.இன்று முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் 15 அடி நீளமுடைய சுறா ஒன்றே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இலங்கை கடற்கரையில் தொடர்ச்சியாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டு வருகின்றது.இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின் கடலாமைகள் மற்றும் ஏனைய கடல்வாழ் உயிரினங்கள் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் பகுப்பாய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.