வீட்டில் தோட்டத்தினுள் தாயும் மகளும் கொடூரமாக கொலை!!!
காபி எஸ்டேட்டில் தாயும், மகளும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கவிதா (45) என்பவரது குடும்பத்துக்கு சொந்தமான காபி எஸ்டேட் உள்ளது. இவருக்கு ஜகஸ்ரீ (17) என்ற 12-ஆம் வகுப்பு படிக்கும் மகளும், உயர்நிலை கல்வி பயிலும் மகனும் உள்ளனர்.
கவிதாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து விட, தனது குழந்தைகளுடன் விவசாய நிலத்தை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கவிதாவின் மகன் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், நெடுநேரமாகியும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், அக்கம்பகக்தினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அவர்கள், கவிதாவின் குடும்பத்துக்கு சொந்தமான இடத்தில் அவரும் அவரது மகளும் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வரும் போலீசார் கூறுகையில், கவிதாவும், அவரது மகளும் மர்ம நபர்களால் கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மதியமே அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்களை கண்டறிந்து மருத்துவ உதவிகளை அளிக்க தாமதமானதால், அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம். முதற்கட்ட விசாரணையில் சொத்து பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், அந்த பிரச்னை தான் கொலைக்கு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது.
மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த கொலையை எதற்காக இடம் பெற்றது என்பது தொடர்பில் எந்த ஒரு தகவலும் வெளிவர வில்லை.
தாக்குதலுக்கு உள்ளான தாய் துடி.. துடித்த இறந்ததாக வைத்திய சாலைத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.