புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் கொடூரமக கொல்லப்பட்ட யாழ்ப்பாண தர்சிகா தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

 கனடாவில் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான இலங்கை தமிழர் சசிகரன் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி சசிகரன் தனபாலசிங்கம் ,  பிரிந்து வாழ்ந்து வந்த   தர்ஷிகா ஜெகன்நாதனை கொலை செய்திருந்தார்.

சம்பவ தினத்தன்று ஆண் ஒருவர் வாளுடன் பெண் ஒருவரைத் துரத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்ற போது, பெண் பலமுறை கத்தியால் வெட்டப்பட்டு காயங்களுடன் கிடந்த நிலையில் பின்னர் உயிரிழந்திருந்தார். இதனையடுத்து உயிரிழந்த தர்ஷிகாவின் கணவர் சசிகரன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

இந்த நிலையில் ஒன்றாறியோ நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய, சசிகரன் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

அதேவேளை சசிகரனுக்கும், தர்ஷிகாவுக்கும் இந்தியாவில் 2015 இல் நவம்பர் முதலாம் திகதி அவர்களது திருமணம் நடந்துள்ளது. அதன்பின்னர் 2017 இல் தர்ஷிகா தனது கணவருடன் சேர்ந்து வாழ கனடாவுக்கு வந்துள்ளார்.

அதன்பின்னர் சில வாரங்களில் கணவரை பிரிந்து தர்ஷிகா வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.

சசிகரன் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு