புதினங்களின் சங்கமம்

கொழும்பில் பொலிஸ் சிறைக்குள் வைத்து பெண் வல்லுறவு!! 2 பொலிசாருக்கு 10 வருட கடூழிய சிறை!!

பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த புறக்கோட்டை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே, அவர்களுக்கு தலா 10 வருடங்கள் கடூழிய சிறைதண்டனையும் 15 ரூபாய் அபராதமும் விதித்து, இன்று (19) தீர்ப்பளித்தார்.

2015 ஆம் ஆண்டு, பெண் ஒருவரை சிறையில் அடைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பிலான நீண்ட வழக்கு விசாரணையில், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்  சந்தேகத்திற்கு இடமின்றி அரச தரப்பு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நீதிபதி மேற்குறிப்பிட்ட தீர்ப்பை வழங்கினார்.