புதினங்களின் சங்கமம்

அரச திணைக்களங்களில் வேலை செய்கின்ற பொம்பிளைகள் சேலை மட்டுமே அணிய முடியுமாம்!!

அரச ஊழியர்களின் உடை தொடர்பாக பொதுநிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் புதிய பொது நிருவாக சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

13/2019 இலக்கம் 2019.05.29. திகதியிடப்பட்ட அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள இந்த சுற்றறிக்கையின் படி குறிப்பாக பெண் ஊழியர்கள் சேலை அணிய வேண்டுமென வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

அதாவது அபாய போன்ற உடைகளுக்கு தடைவிதிக்கும் வகையிலேயே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.