இன்றைய இராசி பலன் ( 31.05.2019)
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாரையும் தாக்கிப்பேச வேண்டாம். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். வியாபாரத்தில் புதுமுயற்சிகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் உங்களைப்பற்றி வதந்திகள் வரும்.
ரிஷபம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.
மிதுனம்: பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.
கடகம்: வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.
சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவுக்கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
கன்னி: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. அடுத்தவர்களை குறைக்கூறுவதை நிறுத்துங்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.
துலாம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். திறமைகள் வெளிப்படும் நாள்.
விருச்சிகம்: அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
தனுசு: ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.
மகரம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
கும்பம்: உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். கம்பீரமாக பேசி சிலகாரியங்களை முடிப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
மீனம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். நட்பு வட்டம் விரியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.