புதினங்களின் சங்கமம்

பேஸ்புக்கில் கொமன்ஸ் போட்ட இலங்கை நீதிபதி பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டார்!!

எம்பிலிபிட்டிய மாவட்ட நீதிவான் பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இனவாத பரப்புரைகளுக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே
அவர் இவ்வாரு பதவி இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை
ஆணைக் குழு தகவல் தெரிவிக்கிறது.

முகப்புத்தகத்தினூடாக இன நல்லுறவை பாதிக்கும் வகையில் கருத்துக்களை பரிமாரியமை
தொடர்பில் குறித்த மாவட்ட நீதிபதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே நீதிச்
சேவை ஆணைக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.