புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் விளக்க பெறுவதற்காக 4 அரச நிறுவனங்களின் பிரதானிகள், இன்று கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று பகல் 02.30 மணிக்கு கோப் குழு கூடவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.

கல்வி அமைச்சு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு, இலங்கை முதலீட்டு சபை மற்றும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களின் பிரதானிகள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகமாக அழைக்கப்பட்டமை தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை கோப் குழு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.