புதினங்களின் சங்கமம்

திட்டமிட்டபடி புலமைப்பரிசில், க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும்!!

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன
திட்டமிட்டபடி இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் பி. சனத் பூஜித் தெரிவித்தார்.

அதன்படி க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகி ஓகஸ்ட் 31ம் திகதி
வரை இடம்பெறும்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இடம்பெறும் என்றும் அவர்
குறிப்பிட்டார்.

இதேவேளை, டிசெம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் கல்லி பொது தராதர சாதாரண தரப்
பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைத்
திணைக்களம் அறிவித்துள்ளது.