புதினங்களின் சங்கமம்

இலங்கையில் பேஸ்புக் உட்பட்ட சமூகவலைத்தளங்களின் தடை நீக்கப்பட்டது!!

நாட்டில் சமூக ஊடகங்கள் மீதான தடை நான்கு தினங்களின் பின் நீக்கப்பட்டுள்ளது.

வைபர், வட்ஸ்அப், யூரியூப் மற்றும் முகநூல் ஆகியவை மீதான தடை இன்று மாலை 6
மணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் சமூக ஊடகங்கள் மீதான தடை நான்கு தினங்களின் பின் நீக்கப்பட்டுள்ளது.

வைபர், வட்ஸ்அப், யூரியூப் மற்றும் முகநூல் ஆகியவை மீதான தடை இன்று மாலை 6
மணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த தாக்குதல்களையடுத்து நாட்டில் சமூக ஊடகங்களுக்கு
இடைக்காலத் தடை ஏற்படுத்தப்படிருந்தது. அந்தத் தடையை ஜனாதிபதி கடந்த 30ஆம் திகதி
நீக்கியிருந்தார்.

அதனையடுத்து நீர்கொழும்பில் ஏற்பட்ட மோதலையடுத்து மீளவும் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக
நிறுத்தப்பட்டு சுமார் 12 மணிநேரத்தில் தடை நீக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை மூன்றாவது முறையாக சமூக ஊடகங்களுக்கு
இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அது நான்கு தினங்களின் பின் நீக்கப்பட்டுள்ளது.