ஜோதிடம்

இன்றைய இராசிபலன் (16.05.2019)

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகளை உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். அமோகமான நாள்.

ரிஷபம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார் கள். புதுமை படைக்கும் நாள்.

மிதுனம்: எதிர்ப்புகள் அடங் கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை அமையும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வாகனத்தை சீர் செய்வீர் கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். வெற்றி பெறும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

கன்னி: மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

துலாம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

தனுசு: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பழையகடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

மகரம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். முகப்பொலிவுக் கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலம் சீராகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மரியாதைக்கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்: மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மற்றவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக்கொண்டிருக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீரகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.