இரவு முழுதும் முடங்கிய பேஸ்புக்,வாட்ஸ்ஆப்! டயலொக்கை சந்தேகப்பட்ட மக்கள்!

நேற்று இரவு 9 மணி முதல் முடங்கிய வட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை சுமார் 8 மணி நேரங்களுக்குப்பின் மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளது.

முதலில் தங்களின் இணையத் தொடர்பில் பிரச்சனை இருப்பதாக கருதிய பயனர்கள், சில மணி நேரத்துக்கு பின்பே சேவை முடங்கியதை அறிந்தனர்.

இந்த பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டதால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பிரதான சேவர் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் சரி செய்யப்பட்டு இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது.கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது. இருப்பினும், ஒரு மணி நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது.

தற்போது, 8 மணி நேரமாக பேஸ்புக், வட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக் மெசெஞ்சர் ஆகியவற்றின் சேவை முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பேர் அவதிக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது

error

Enjoy this blog? Please spread the word :)