புதினங்களின் சங்கமம்

யாழ் உடுவில் பிரதேசசபையில் குண்டுப் புரளியால் ஏற்பட்ட பதற்றம்!!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச சபையில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளது.

உடுவில் பிரதேச சபையில், வட்டார ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பாக உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பிரதேச சபையில் குண்டுவைக்கப்படும் என்று தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
அதனையடுத்து உறுப்பினர்கள் குழப்பமடைந்தனர். அதனால் கூட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.

அங்கு மோப்ப நாய்களுடன் வருகை தந்த குண்டு செயலிழக்கும் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.  அங்கு எவ்வாறன தடயங்களும் மீட்கப்படவில்லை. பிரதேச சபையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கூட்டம் தற்போது தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.