பல்சுவை செய்திகள்புதினங்களின் சங்கமம்

வடகொரியாவில் மனைவி-மகள் உட்பட 500 பேர் முன்னிலையில் கணவனுக்கு கொடுக்கப்பட்ட கொடூர மரண தண்டனை! என்ன தவறுக்காக தெரியுமா?

வடகொரியா நாட்டில் நாட்டின் விதிமுறைகள் மீறி செயல்பட்டதன் காரணமாக, 500 பேர் முன்னிலையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிறிய தவறு செய்தால், கூட அந்த தவறு அடுத்து நடந்துவிடக் கூடாது என்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் சில கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில், மர்மம் நிறைந்த வடகொரியா நாட்டில் சொல்லவே தேவையில்லை.

தனக்கு தவறு என்று தெரிந்தால், உடனடியாக வட்கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மரண தண்டனையை அறிவித்துவிடுவார். அந்த வகையில், தற்போது வடகொரியாவில் சட்டவிரோத திரைப்படங்களை விற்றதற்காக, அந்நாட்டைச் சேர்ந்த நபர் 500 பேர் முன்னிலையில், துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்கள் 500 பேர் முன்னிலையிலும், அந்த கூட்டத்தில் குறித்த நபரின் பெற்றோரும் நிற்க வைக்கப்பட்டு, இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரணதண்டனைக்குள்ளான நபர், தென் கொரியாவிலிருந்து நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை உள்ளடக்கிய வீடியோக்களை விற்பனை செய்தற்காக கடந்த வியாழக்கிழமை கொல்லப்பட்டார் என்று டெய்லி என்.கே ஊடகம் தெரிவித்துள்ளது.

அவர் கைது செய்யப்பட்ட 40 நாட்களுக்குப் பிறகு, நாட்டின் காங்வோன் மாகாணத்தின் வொன்சன் நகரில் பொது மக்கள் 500 பேர் நிறுத்தப்பட்டு, முன் வரிசையில் அவரின் குடும்பத்தினர் நிற்க வைக்கப்பட்டனர்.

இது போன்று மரணதண்டனை இந்த மாகாணத்தில் நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறை இது போன்ற பிற்போக்குத்தனமான நடத்தை நமது நாட்டின் சோசலிசத்தை அழிக்க முயற்சிக்கு மக்களுக்கு உதவுகிறது.

பிற்போக்குவாதிகள் நம் சமூகத்தில் அச்சமின்றி வாழ அனுமதிக்கக்கூடாது என்று வாசிக்கப்பட்டு, லீயின் மீது சுமார் 12 முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட லீயின் மனைவி, மகன் மற்றும் மகள் அவர் இறந்ததைக் கண்டு அந்த இடத்திலே கதறி அழுது சரிந்தனர்.

இதே போன்று தென்கொரியாவின் இசை மற்றும் திரைப்படங்களை விற்றதாக கூறி 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் இறுதியில் அது நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க வாய்ப்புள்ளது.

ஏனெனில், கடந்த ஆண்டு தான் இந்த சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டது. அதாவது நாட்டின் சோசலிச-வீரோதித்திற்கு எதிராக நடப்பதாக குறிப்பிட்டு, இதை பிற்போக்குத்தன எதிர்ப்பு சிந்தனைச் சட்டத்தால் கொண்டு வரப்பட்டது. நீங்கள் ஒரு தென் கொரிய வீடியோவைப் பார்த்தால், சிறைவாசம் அல்லது மரணத்தில் ஆயுள் தண்டனை பெறுவீர்கள் மற்றும் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.